செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு 31.08.2026 & 01.09.2026

அலுவலர்களின் தொழில் உற்பத்தித்திறன் மற்றும் கற்றல்–கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய கல்வியியலாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் வளவாளர்களுக்கான இரு நாள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிலரங்கு 31.08.2026 மற்றும் 01.09.2026 ஆகிய இரு தினங்களில் தீவக கணினி வள நிலையத்தில், காலை 8.30 மணி முதல் நடைபெறுகிறது.நவீன கல்விச் சூழலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், அலுவலகப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், தகவல் தயாரித்தல், கற்றல்–கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையப்படுத்தி இப்பயிலரங்கு முன்னெடுக்கப்படுகிறது.கல்வி நிர்வாகம் மற்றும் கற்றல்–கற்பித்தல் செயற்பாடுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான நடைமுறை அறிவு மற்றும் திறன்களைப் பெற்றுக்கொள்வதற்கு இப்பயிலரங்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

திகதிகள்: 31.08.2026 & 01.09.2026

இடம்: தீவக கணினி வள நிலையம்

ஆரம்ப நேரம்: காலை 8.30 மணி

இப்பயிலரங்கு மூலம் பங்கேற்பாளர்கள் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைத் தமது அன்றாட அலுவலகப் பணிகளிலும் கல்விச் செயற்பாடுகளிலும் திறம்படப் பயன்படுத்துவதற்கான புதிய அறிவு, திறன்கள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொள்வர்.

Author

Islands Zonal Education Office © 2026 Design By ICT Team Islands ZEO