Jaffna Social Action Center (JSAC) (யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையம்) இனுடைய ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட 25 அதிபர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு செயலமர்வு, பிள்ளைகளுக்கான சிறுவர் உரிமைகள் மற்றும் தரமான கல்வியை உறுதி செய்யும் நோக்குடன் சிறப்பாக நடைபெற்றது.J Guest House, புங்கன்குளம், யாழ்ப்பாணம் இல் அமைதியானதும் இனிமையானதுமான சூழலில் நடைபெற்ற இச்செயலமர்வு, அதிபர்களுக்கு அறிவு, அனுபவம் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளும் பயனுள்ள தளமாக அமைந்தது.இச்செயலமர்வில், பிள்ளை நேயக் கற்றல், சிறுவர் உரிமைகள், தரமான கல்வி மற்றும் பாடசாலை மட்டத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. வளவாளர்களாக கலந்து சிறப்பித்தவர்கள்: திரு. த. கனகராஜ்பிராந்திய இணைப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ். மாவட்டம் கலாநிதி. பா. தனபாலன்நிர்வாக ஆலோசகர், கல்வி அமைச்சுசிரேஷ்ட விரிவுரையாளர், யாழ். தேசிய கல்வியியல் கல்லூரி திரு. க. கமலநாதன்ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர்யாழ். தேசிய கல்வியியல் கல்லூரிஇரண்டு நாட்களும் அதிபர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய சிந்தனைகளையும் உத்திகளையும் பெற்றுக்கொண்டனர். ஒவ்வொரு குழந்தையின் உரிமையையும் மதித்து, பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் தரமான கற்றல் சூழலை உருவாக்கும் அதிபர் தலைமைத்துவத்தை வலுப்படுத்திய ஒரு அர்த்தமுள்ள செயலமர்வாக இது அமைந்தது.
